அமேசான் நிறுவனத்தின் ஃபயர் ஸ்டிக் சாதனத்தை போலவே, பேஸ்புக் ஸ்ட்ரீமிங் சாதனத்தை அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமேசான் ஃபயர் ஸ்டிக் என்பது ஆன்லைன் உள்ளடக்கத்திற்கான அணுகலை வழங்கும் நோக்கத்தின் கீழ் டிவி உடன் இணைக்கப்படும் ஒரு சாதனமாகும். பேஸ்புக் நிறுவனம் கொண்டுவரும் புதிய ஸ்ட்ரீமிங் சாதனம் நிறுவனத்தின் Portal Family சாதனங்களில் ஒரு பகுதியாகும் இருக்கும் என்றும், இதில் ஒரு கேமரா இடம்பெறும் என்றும், பின்பு TV viewing மற்றும் Augmented Reality (AR) ஆகியவைகளை இணைக்கும் வீடியோ சாட் ஆதரவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேஸ்புக் ஸ்டீரிமிங் சாதனத்தில் ஸ்பீக்கர்,கேமரா, மைக்ரோஃபோன் என பல்வேறு அம்சங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் கொண்டுவரும் இந்த புதிய சாதனம் ஆண்ட்ராய்டு பதிப்பை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் தற்போதுள்ள Portal தளத்தை பயன்படுத்தி வீடியோ சாட் அம்சத்தையும் இந்த சாதனத்தில் பேஸ்புக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர்டல் சாதனம் கடந்த நவம்பர் 2018-யில் தொடங்கப்பட்டது. 10 இன்ச் டிஸ்பிளேவை கொண்ட சிறிய சாதனத்தின் விலை 199 அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.